உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல்

மாமல்லபுரம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகள் செய்து வருகிறது. இன்னும், சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 12,660 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, திமுக சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில், 15 வார்டுகளில், மொத்தம் 30 பேர் விருப்ப மனு அளித்தனர். இந்த 26 பேரிடம் நேர்காணல் நிகழ்ச்சி மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக வளர்த்சி துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

இதுகுறித்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், ‘மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு திமுக சார்பில் போட்டியிட தற்போது விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், பெறப்பட்ட பதில்கள் அறிக்கையாக கட்சி தலைமைக்கு அனுப்பப்படும். பின்னர், அதில் யாரை தேர்வு செய்வது என தலைமை முடிவு செய்யும்’ என்றார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் மல்லை வெ.விஸ்வநாதன், அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி சண்முகானந்தன், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், நேற்று முன்தினம், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் நடந்தது. இதில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகர செயலாளர் ச.நரேந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் கடந்த மாதம் விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் திமுகவினரிடம் நேர்காணல் நடத்தினார். மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு போட்டியிட மனு செய்த 33 நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழுத் தலைவருமான இதயவர்மன், மாவட்டத் துணைச் செயலாளர் அன்புச்செழியன், நகர செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: