காந்தி மார்க்கெட் பகுதியில் பைக் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி, ஜன. 21: திருச்சி காந்திமார்க்கெட் நடுதையல்கார தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் கடந்த 18ம் தேதி இரவு பைக்கை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். தொடர்ந்து காலை எழுந்து பார்த்த போது நிறுத்தி இருந்த பைக்கை காணாதது குறித்து திடுக்கிட்டு அக்கம்பக்கத்தில் தேடினார். பைக்கை காணாததால் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த எஸ்ஐ கோபால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு ெசய்தார். இதில் பதிவாகி இருந்த இபி ரோடு கருவாடு பேட்டையை சேர்ந்த பரணிகுமார் (20), பாலக்கரை செங்குளம் காலணியை சேர்ந்த 15 வயது சிறுவன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று முன்தி்னம் கைது செய்தார்.

Related Stories: