வெவ்வேறு சம்பவம் 2 இளம்பெண்கள் திடீர் மாயம்

திருச்சி, ஜன. 21: திருச்சி-திண்டுக்கல் ரோடு கோரிமேட்டை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி (26). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 7ம் தேதியும் தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி வளவனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் சவுமியா (22), சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற சவுமியா, வீடு திரும்பவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுமியாவை தேடி வருகின்றனர்.

Related Stories: