தைப்பூச தேரோட்டம்

பாப்பாரப்பட்டி, ஜன.21: பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் தேர் விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடந்தது. நேற்று முன்தினம், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று நடைபெற இருந்த விநாயகர் தேரோட்டம், கொரோனா வழிகாட்டுதல் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், கோயில் பிரகாரத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: