×

மாட்டு கொட்டகையில் தீ மூதாட்டி உடல் கருகி சாவு

ஊத்தங்கரை, ஜன.21: ஊத்தங்கரை அருகே மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை கொம்பப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மாள்(80). இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக, அருகில் உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கேயே படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு நேரத்தில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஜெயம்மாள் திடுக்கிட்டு எழுந்துள்ளார். கொளுந்து விட்டு எரிந்த தீயை கண்டதும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவர் மீது தீப்பற்றிக்கொண்டது. இதில், உடல் கருகிய ஜெயம்மாள் கதறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காரப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை