ஒன்றிய அரசை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.21:  டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக கலாச்சார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் உபேத் முனியன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி, சுபத்ரா, பெருமாள், சங்கரன், துரை, இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். கண்ணு, சிவகுமார், முனிசாமி, திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப் போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் உருவபடங்கள் இடம்பெறும் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது,’ என்றனர்.

Related Stories: