சேந்தமங்கலம் தாலுகாவில் புதுமண தம்பதியருக்கு

திமுக சார்பில் தங்க நாணயம்சேந்தமங்கலம், ஜன.21: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி பேரூராட்சிகளில் திமுகவை சேர்ந்த புதுமண தம்பதியருக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு, புதுமண தம்பதியருக்கு தங்க நாணயத்தை வழங்கி பேசியதாவது: சட்டமன்ற தேர்தல், கொரோனா தொற்று காலம் என்பதால், தங்க நாணயம் வழங்கும் நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒன்றியம் வாரியாக, புதுமண தம்பதிக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தலைமை மூலம் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை, நிர்வாகிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் தான், நம் முதல்வர் மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்கள், அவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். எக்காரணத்தைக் கொண்டும் சீட்டு கிடைக்காதவர்கள், எதிரிகளுக்கு துணை போகாமல் கட்சிக்காக உழைத்தால், பல்வேறு பதவிகள் காத்திருக்கிறது. 3 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். நிர்வாகிகள் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரூர் செயலாளர்கள் தனபாலன், நடேசன், பழனியாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் சாம்சம்பத், செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: