ஜல்லிக்கட்டு நடத்த வங்காநரி பிடித்த 6 பேர் மீது வழக்கு

வாழப்பாடி, ஜன.21:  வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்த 6 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர் மற்றும் கொட்டவாடி ஆகிய பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, மாலை நேரத்தில் ஏற்கனவே வனப்பகுதியில் இருந்து கூண்டு வைத்து பிடித்து வந்திருந்த வங்கா நரியை கொண்டு, தடையை மீறி கோயிலை சுற்றி வந்து ஜல்லிக்கட்டு நடத்தினர். பின்னர், வங்கா நரியை வனப்பகுதியில் விடுவித்தனர். அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்பட்ட வங்கா நரி ஜல்லிக்கட்டு குறித்து, கிராமத்தில் நேரில் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள், வங்கா நரியை பிடித்த வெள்ளையன்(42), ஆறுமுகம்(65), இளவரசன்(47), வெங்கடாஜலம்(53), அர்ஜூனன்(55) உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் தலா ₹25 ஆயிரம் வீதம் ₹1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Related Stories: