சேலம் மரவனேரியில் ஆடிட்டர்கள் ஆபீசில் கொள்ளை முயற்சி

சேலம், ஜன.21: சேலம் மரவனேரியில் ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து, அலுவலகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பைல்களை கலைத்து போட்டு விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை, அலுவலகத்தை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மர்மநபர்கள் ஆவணங்களை தேடி வந்தார்களா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதே  போல், அருகில் உள்ள இன்னொரு ஆடிட்டரான சங்கரராமன் அலுவலகத்திலும் மர்மநபர்கள்  புகுந்து, அங்கிருந்த ஆவணங்களை கலைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: