×

வீதியில் கேட்பாரற்று கிடந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம், ஜன. 21: விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் பறக்கும் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விழுப்புரம் அருகே வீரமூர் கிராமத்தில் குடிமைப்பொருள் வழங்கல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சிவன் கோயில் தெருவில், ஜக்குபாய் என்பவரது வீட்டு வாசலில் கேட்பாரற்று 86 சாக்கு மூட்டைகளில் 4,300 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதனை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து குற்றவாளிகளை கண்டறிய குடிமை பொருள் காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை