பிளாஸ்டிக் 100 கிலோ பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அரசின் எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சிஎம்டிஏ முதன்மை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அந்த கடைகளில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒவ்வொரு கடைக்கும் தலா ₹1,000 வீதம் ₹5,000 அபராதம் விதித்து, அக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை உபயோகப்படுத்துமாறு அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: