சென்னை மாநகராட்சி பகுதியில் 20-39 வயதுடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 627 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 62 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 8,760 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யப்படும் நிலையில்,  நாள் ஒன்றுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால், கொரோனா பரவல் 29 முதல் 30 சதவீதமாக நீடிக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்கள் அதிகம் உள்ள மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் 9 வயதுடைய 1.79 சதவீதம் பேரும், 10 வயது  முதல் 19 வயதுடைய 6.30 சதவீதம் பேரும், 20 வயது முதல் 29  வயதுடைய 20.55 சதவீதம் பேரும், 30 வயது முதல் 39 வயதுடைய 20.58  சதவீதம் பேரும், 40 வயது முதல் 49 வயதுடைய 15.79 சதவீதம் பேரும்,  50 வயது முதல் 59 வயதுடைய 15.60 சதவீதம் பேரும், 60 வயது முதல் 69  வயதுடைய 10.39 சதவீதம் பேரும், 70 வயது முதல் 79 வயதுடைய 6.28 சதவீதம்  பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 2.73 சதவீதம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், என மாநகராட்சி தெரிவித்துள்ளது.    

நோயாளி தற்கொலை

சென்னையில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குணா தயாகர் (45) என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிய பிறகு, அறையின் மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரதே  பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  வழக்கு பதிவு செய்து, மன உளைச்சல் காரணமாக  அவர் தற்கொலை செய்து கொண்டாரா  அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Related Stories: