×

லெப்பைகுடிகாட்டில் அனுமதியின்றி இயங்கிய 3 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி

பெரம்பலூர்,ஜன.21: கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ பெரம்பலூர் மாவட்டத்திற்குள் இயக்கி வருவதாக தொடர்ந்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் வந்தது.இதனால் நேற்று திடீரென பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லெப்பை குடிகாடு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அழகரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது அனுமதிக்குப்புறம்பாக இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள், ஓட்டுனர் உரிமம், காப்புச்சான்று தகுதிச்சான்று, புகைச்சான்று ஆகியவை இல்லாத காரணத்தினாலும் அனுமதிக்கு புறம்பாக இயக்கியதும் போன்ற குற்றத்திற்காக மூன்று ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்