தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சியை முன்மாதிரி கிராம ஊராட்சியாக உருவாக்க வரைபட திட்டம் தயாரிப்பு

தோகைமலை, ஜன.21: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2021-2022 ம் ஆண்டின் முன்மாதிரி கிராம ஊராட்சியாக உருவாக்குதல் மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்து வரைபடம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக தோகைமலை ஒன்றியத்தில் உள்ள நாகனூர் மற்றும் ஆர்ச்சம்பட்டி ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் 2021-2022 ம் ஆண்டின் முன்மாதிரி கிராம ஊராட்சியாக உருவாக்குதல் மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்து வரைபடம் வரையும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாகனூர் ஊராட்சி நாகனூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த இந்நிகழ்சிக்கு ஒன்றிய ஆனையர் (கிராம ஊராட்சி) சரவணன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜா, ஒன்றிய பொறியாளர் மைதிலி முன்னிலை வகித்தனர்.

இதில் நாகனூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களின் தோற்றங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகள், சாலைகள், வீதிகள், பள்ளிகள், கோவில்கள், இயற்கை சூழல்களின் தோற்றங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளை கொண்ட நாகனூர் ஊராட்சியின் முழு தோற்றங்களை வரைபடமாக வரைந்தனர். இதன் மூலம் நாகனூர் ஊராட்சிகளில் சாக்கடை கழிவுநீர், வடிகால் வசதி எந்தெந்த பகுதிகளில் உள்ளது, எந்தெந்த பகுதிகளுக்கு சாக்கடை கழிவு நீர் வடிகால் வசதிகள் தேவை, வடிகாலில் செல்லும் சாக்கடை கழிவு நீர் இறுதியாக எங்கு தேங்கி நிற்கிறது என்று கணக்கிடப்பட்டது.

இதன் மூலம் சாக்கடை கழிவுநீர் பொது இடத்தில் தேங்கி நிற்காமல் சமுதாய உறிஞ்சு குழி அமைத்து கழிவு நீரை அதில் செலுத்துவது, குடியிருப்புகளில் பய்னபடுத்தும் கழிவுநீரை அந்தந்த குடியிருப்புகளில் தனி நபர் உறிஞ்சு குழிவு அமைத்து அதில் கழிவு நீரை செலுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. எதிர் காலங்களில் சாக்கடை கழிவு நீர் பொது இடங்களில் தேங்கி நிற்காமல் இருக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உள்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories: