குளித்தலை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

குளித்தலை, ஜன.21: குளித்தலை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கான பொதுஇட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கான பொது இட ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. குளித்தலை நகராட்சி 24 வார்டுகள் கொண்ட பகுதியாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 655ம், பெண் வாக்காளர்கள் 11,857 என மொத்தம் 22 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தலைவர் பதவிக்கு பெண்கள் பொது என இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 24 வார்டுகளில் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் வருமாறு:எஸ்.சி பொது 13, 20 வார்டு, எஸ்.சி பெண்கள், 1, 21 வார்டு, பெண்கள் பொது 5, 6, 8, 10, 11, 15, 18, 19, 24, 22 வார்டு, ஆண்கள், பெண்கள் போட்டியிடும் பொது வார்டு 2, 3, 4, 7, 9, 12, 14, 16, 17, 23 ஆகும்.

Related Stories: