வேலாயுதம்பாளையம் அருகே வரப்பு தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேருக்கு வலை

வேலாயுதம்பாளையம், ஜன.21: வேலாயுதம்பாளையம் அருகே புங்கோடை காளிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி(65), விவசாயி. அதே பகுதியில் உள்ள இவரது வயலில் வரப்பு உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது. இதுகுறித்து சுப்பிரமணி மனைவி லட்சுமிக்கும், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ் மனைவி கோமதிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோமதிக்கு ஆதரவாக அங்கு வந்த மசக்கவுண்டன்புதூரை சேர்ந்த உதயகுமார் மற்றும் மூன்றுபேர் லட்சுமியை தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து கோமதி, உதயகுமார் உள்பட 5 பேரை தேடி வருகிறார்.

Related Stories: