மது குடித்ததில் தகராறு இரு தரப்பினர் புகார் 8 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஜன.21: கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி வருந்திபட்டியை சேர்ந்தவர்கள் சக்திவேல், பிரகாஷ் என்ற திருமுகன், அஜித், சண்முகம், அருள்முருகன், மூர்த்தி. இவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் வருந்திபட்டியில் உள்ள செங்காட்டுபாறை சக்திவேல் வீட்டின் அருகே ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளனர். அப்போது குடிபோதை அதிகமான நிலையில் ஒருவருக்கு ஒருவர் வாய்த் தகராறு செய்து உள்ளனர். இதில் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து அருள்முருகன் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், வீரமலை, சந்திரா ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் பிரகாஷ் என்ற திருமுகன், அஜித், சண்முகம், அருள்முருகன், மூர்த்தி ஆகிய 5 பேர் என மொத்தம் ஒரு பெண் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: