திருவண்ணாமலை மாவட்டத்தில்தினசரி கொரோனா பாதிப்பு 450ஐ கடந்து செல்வதால் அச்சம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்த நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் வெகுவாக அதிகரித்து வருவதால் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கிறது. தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 10க்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது தினமும் சராசரியாக 450க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, தொற்றுக்கான அறிகுறி காணப்படும் நபர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாரதாத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை 58,664 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 2,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இனிவரும் நாட்களில் பாதிப்பு கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளது.எனவே, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், இணை நோய் இல்லாதவர்கள், ஆரம்ப நிலை அறிகுறி காணப்படுவோர் மட்டும் உரிய வசதிகள் இருக்கும்பட்சத்தில் வீடுகளில் தனிமைப்படுத்திடவும், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், தொற்று பரவலின் வேகம் இதே நிலையில் நீடித்தால், அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் போதுமானதாக இருக்காது என தெரியவந்துள்ளது. எனவே, இரண்டாவது அலை தீவிரத்தின்போது மேற்ெகாண்ட சிறப்பு ஏற்பாடுகளை தற்போதும் செய்திட சுகாதாரத்துறைக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள், அதற்கான பணிகளை முன்னின்று செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரானா ெதாற்று பரவலை கட்டுப்படுத்த, பொது இடங்களில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் இருந்து ₹24 லட்சம் அபராதம் வசூலித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.எனவே, இனிவரும் நாட்களில் விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதான நடவடிக்கையை அதிகரிப்பதன் மூலம், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: