337பேருக்கு கொரோனா பாதிப்பு வேலூர் மாவட்டத்தில் சற்று குறைந்தது

வேலூர், ஜன.21:வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 447 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் நேற்று 337 ஆக குறைந்துள்ளது.உருமாறிய கொரோனா தொற்று பரவல் உலகை தற்போது அலைக்கழித்து கொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் அலை தொடங்கி தற்போது 3வது அலை நடந்து வரும் நேற்று முன்தினம் வரை மொத்தம் 54 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுளளனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2,466 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 337 ஆக பதிவாகி உள்ளது. இதில் தனியார் டாக்டர்கள், காவலர்கள் அடங்குவர். மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் 40 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை மட்டும் சேர்ந்தவர்கள் 286 பேர் உள்ளனர். தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

Related Stories: