கோயிலில் சிலைகள் திருட்டு

வேலுார், ஜன.21–: வேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம்(64). இவர் அதேபகுதியில் திருபாதரசமகாலிங்கேஸ்வரர் கோயிலை பராமரித்து வந்தார். கடந்த 12ம் தேதி காலை 8.30 மணிக்கு திறந்து பூஜைகள் செய்து இரவு 9.30 மணிக்கு பிறகு பூடப்பட்டது. தொடர்ந்து, மறுநாள் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக ஞானசுந்தரம் வந்தார். பூஜை அறைக்குள் சென்று பார்த்த போது கோயிலின் மேற்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த பித்தளை கோமதா சிலை, ஓட்டகம் சிலை, குதிரை சிலை, சிங்கம் சிலை ஆகியவை மெட்டலால் செய்யப்பட்டவை. மேலும், பித்தளை தீபம் ஒன்று, பாதரச லிங்கம் ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசுந்தரம் சத்துவாச்சாரி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: