மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி காட்பாடி அருகே

வேலூர், ஜன.21:காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோடு பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). இவர் 18ம் தேதி அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை ஏரிக்கரை அருகே சென்றபோது அவரது பைக் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்ணீரில் அவரது சடலம் மிதந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீரில் மிதந்த முருகனின் சடலத்தை மீட்டனர். மீன் பிடிக்க வந்த முருகன் தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத்தெரிகிறது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: