திருடர்களுக்கு உதவிய திருநங்கை சிக்கினார்

பெரம்பூர்: வியாசர்பாடி காந்தி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மல்லிகா(63). கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி எம்.கே.பி.நகர் சர்மா நகர் 1வது மெயின் ரோடு வழியாக நடந்து சென்றபோது இரண்டு நபர்கள் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவரம் அஜித்குமார் குப்தா (எ) வெள்ளை அஜித்(22) மற்றும் வியாசர்பாடி முகேஷ்(19) ஆகியோரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தங்கச்சங்கிலியை அவர்களிடம் இருந்து வாங்கி அடகு கடையில் அடமானம் வைத்து உதவி செய்த அயனாவரம் புது நகரை சேர்ந்த சஞ்சனா(29) என்ற திருநங்கையை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: