×

திருச்சி மாநகராட்சியில் 33 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

திருச்சி, ஜன. 20: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக நகராட்சி, பேரூராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகியவை யார் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலர் சிவதாஸ்மீனா வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து எந்தெந்த வார்டுகள் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் வேட்பாளர் பொது என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது. இதில் 17,42,65 ஆகிய மூன்று வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது) என்றும், 6,8,15,62 ஆகிய நான்கு வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு என்றும், 1,3,4,7,9,11, 13,18,21,22, 24,26,30,31, 32,33,37, 44,45,49, 50,51,52, 53,56,58, 59,63,64 ஆகிய வார்டுகள் பெண்கள்(பொது) என்றும் மற்ற அனைத்து வார்டுகளும் பொதுப்பிரிவு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 33 வார்டுகளில் பெண்களும், 32 வார்டுகளில் ஆண்களும் போட்டியிட உள்ளனர்.

Tags : Trichy Corporation ,
× RELATED திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர...