×

திருச்சியில் போலீசார் வாகன சோதனை ஆட்டோவில் கடத்திய 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்


திருச்சி, ஜன. 20: தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் நேற்று மாலை திருச்சி ரங்கம் கொள்ளிடக்கரை பஞ்சக்கரை அருகே ரங்கம் சிறப்பு எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆட்டோவில் 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து மூட்டைகளுடன் போலீசார் ரங்கம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது தென்னூர் ரெஜிமண்டல் பஜாரை சேர்ந்த தவக்கல் பாட்ஷா (60) என்பது தெரியவந்தது. மேலும், குட்கா பொருட்களை தென்னூரை சேர்ந்த பக்ருதீன் என்பவர் ஏற்றி விட்டு, ரங்கம் கொள்ளிடக்கரை சக்திநகரில் உள்ள அசோக் (44) என்பவரின் வீட்டில் இறக்கி வைத்து வரக்கூறியதாக கூறினார். தொடர்ந்து ஆட்டோ மற்றும் 50 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அசோக், பக்ருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED திருச்சி அருகே சரக்கு வாகனம் மீது மணல்...