லாரியில் சிக்கி மேஸ்திரி பலி காட்பாடியில் விபத்து

வேலூர், ஜன.20: காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(30), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை தனது நண்பர் பாலாஜியுடன் வேலூர் நோக்கி பைக்கில் வந்தார். சில்க் மில் அருகே லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பரந்தாமன் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பாலாஜி படுகாயம் அடைந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரந்தாமனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: