உளுந்து பயிரிட்டு லாபம் பெறலாம் உதவி இயக்குநர் ஆலோசனை

காரைக்குடி, ஜன.20: சம்பா நெல்பயிர் அறுவடை செய்தவுடன் உளுந்து பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம் என கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, கல்லல் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 10ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழை பெய்ததால் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படும் வயல்களில் மண்வளம் குறைந்து பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே குறைந்த நீரை பயன்படுத்தி அதிக லாபம் பெற நெல் தரிசில் உளுந்து, பச்சை பயறு போன்ற பயறு வகைகள் பயிர்களை ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ என்ற அளவில் நெல் அறுவடை செய்த வயல்களில் விதைப்பு செய்யலாம். உளுந்து பயிரில் உள்ளவேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் சத்துக்கள் நிலை நிறுத்தப்படுவதுடன் நெல் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப் பயறு, காராமணி, பனிப்பயறு ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருவதால் அறுவடையின் போது கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories: