மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

போச்சம்பள்ளி, ஜன.20: திருப்பத்தூர் மாவட்டம், வலசை பகுதியை சேர்ந்தவர் சிகாமணி மகன் தனஸ்(21). இவர் பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பிச்சனம்பட்டியை சேர்ந்த உறவினர் தேவராஜின் வீட்டுக்கு வந்திருந்தார். அதே பகுதியை சேர்ந்த சக்தியின் மகள் தேவி (19, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்த தேவி திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் தந்தை மத்தூர் போலீசில் புகாரளித்தார். அதில், தனஸ் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: