முள்வேலியில் சிக்கி காயமடைந்த குட்டி யானையை தேடும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை, ஜன.20: தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில், 60 யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் 2 வயதுள்ள யானை குட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள முள்வேலியில் சிக்கியதால் தும்பிக்கையில் அடிபட்டது. யானை குட்டியை பிடித்து சிகிச்சை அளிக்க, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினருடன் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எங்கும் தென்படவில்லை. இதனால், குட்டி யானை அருகில் உள்ள கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் சென்றதா என கர்நாடக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வரும் 60 யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஜவளகிரி வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: