விசிக ஆலோசனை கூட்டம்

கடலூர், ஜன. 20: கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். கடலூர் நகரம் குப்பன் குளம் மற்றும் குட்டக்கார தெரு பகுதியில் வாழக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை கடலூர் மாநகராட்சி ஆணையர் 30 நாட்களுக்குள் அனைவரும் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகிறார்கள் என்றால் அதில் அனைவருக்கும் வீடு வேண்டும். என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கடலூர் நகர செயலாளர்கள் செந்தில், ராஜதுரை, நிர்வாகிகள்  ஆறுமுகம், வெற்றி, புஷ்பராஜ், வடிவேல், விக்கி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: