திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர்: வீரராகவர் கோயில் குளத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட மீன்கள் செத்து மிதந்தன.திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன்கள் குட்டிகள் விடப்பட்டன. தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள், கோயில் குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், நீராடவும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கோயில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் 2 கிலோ முதல் 5 கிலோ வரை வளர்ந்து இருந்தது. அந்த மீன்கள் நேற்று காலை செத்து மிதந்து கிடந்தன.  இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர், வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், செத்து மிதக்கும் மீன்களையும், நீரையும் ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: