வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

காரிமங்கலம், ஜன.19: காரிமங்கலம் அடுத்த சொர்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ்(21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் அஜய், லோகேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அஜய், லோகேஷ் இருவரும் சேர்ந்து விக்னேஷை தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அஜய் என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: