முருகன் கோயிலில் தைப்பூச விழா

காரிமங்கலம், ஜன.19: காரிமங்கலம் அடுத்த பூலாபட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். காரிமங்கலம் சென்னம்பட்டி முருகன் கோயில், முரசுபட்டி முருகன் கோயில், மந்தை வீதி முருகன் கோயில் ஆகியவற்றில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: