×

ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால் பயணிகள், தொழிலாளர்கள் அவதி

காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் பயணம் செய்ய கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் அவசியம் என பயணிகளிடம் வற்புறுத்தி திருப்பி அனுப்புகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம் செல்லும் பயணிகள் ரயிலில் தினமும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்தவேளையில், மாதந்தோறும் பயன்படுத்தும் சீசன் டிக்கட் எடுக்கவும், தினமும் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வரும் பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்து பயணச்சீட்டு கொடுக்காமல் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புகிறது. இதனால், ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் ஏராளமானோர், ரயிலில் பயணம் செய்ய முடியாமல் பணத்தை அதிகளவில் செலவு செய்து, பஸ்சில் செல்கின்றனர். இதனால் அவர்களது நேரமும், பணமும், உடல்நிலையும் பாதிக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம், பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது, ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என  ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு