திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சமத்துவ பொங்கல் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு துவங்கப்பட்டு, தற்போது 30க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. இந்நிலையில், திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் மகளிர் சமத்துவ பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. காஞ்சிபுரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் மலர் ராமசந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிராம சேவை கட்டிடம் புனரமைக்கப்பட்டு, மகளிர் குழு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பொங்கலிட்டு பாரம்பரிய கும்மி பாட்டு பாடி அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதில், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: