×

நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் இடங்கள் குறித்து திமுக தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் நகர மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்தை அந்தந்த நகர - பேரூர் மற்றும் மாவட்ட கட்சியினரிடம் இருந்து பெற்று, போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் முழு விவரங்களை அந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து, கட்சி தலைமை அனுப்பி வைக்கும் பிரதிநிதிகளிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நாளை காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை கட்சி தலைமை அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்கும்படி தெரிவித்து கொள்கிறேன்.
போட்டியிட விரும்பும் திமுகவினர், விருப்ப விண்ணப்பப் படிவத்தை வழங்கி அதற்கான விண்ணப்ப கட்டண ரசீதை உடன் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தாம்பரம் மாநகராட்சி (தாம்பரம் - பல்லாவரம் தொகுதி) மற்றும் குன்றத்தூர், மாங்காடு,  நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி வாரியாக 20-1-2022  (நாளை) விண்ணப்பப் படிவங்கள் பெறும் பிரதிநிதிகள், விண்ணப்பங்கள் பெறும் இடம் பின்வருமாறு:-
மாநகராட்சி  நகரம்    இடம்     பிரதிநிதி
தாம்பரம் மாநகராட்சி (தாம்பரம் தொகுதி)    கோன் கிருஷ்ணா திருமண மண்டபம், தாம்பரம்    படப்பை ஆ.மனோகரன் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், தி.க.பாஸ்கரன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்.
தாம்பரம் மாநகராட்சி (பல்லாவரம் தொகுதி)    எஸ்.எஸ்.மகால்  திருமண மண்டபம்,  பம்மல்    எல்.இதயவர்மன் திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்,  டி.எஸ்.எம்.ஜெயகரன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை து.அமைப்பாளர்.
குன்றத்தூர் நகராட்சி    செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர்    இரா.பொன்னுராம் தொ.மு.ச பேரவைச் செயலாளர்
மாங்காடு நகராட்சி    கல்யாணி திருமண மண்டபம், மாங்காடு    நா.கோபால் பெரும்புதூர்  தெற்கு ஒன்றியச் செயலாளர்
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி    எம்பிஆர் லட்சுமி திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி    பையனூர் சேகர் திருப்போரூர்  தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்.

நேர்காணல்
நாள்    நேரம்    பகுதி    இடம்
20.1.2022    காலை 9 மணி    ஆலந்தூர் வடக்கு    அரிகரன் மகால் திருமண மண்டபம், நங்கநல்லூர்
    காலை 11 மணி    ஆலந்தூர் தெற்கு    
    மாலை  3 மணி    செங்கல்பட்டு நகரம்    நகராட்சி திருமண மண்டபம், செங்கல்பட்டு
    மாலை 5 மணி    மறைமலைநகர்    ஆழ்வார் பேலஸ் திருமண மண்டபம், மறைமலைநகர்
21.1.2022    காலை 9 மணி    திருப்போருர் பேரூராட்சி    ஒன்றிய திமுக அலுவலகம், திருப்போரூர்.
    காலை 10 மணி    மாமல்லபுரம் பேரூர்    சாய் கெஸ்ட் அவுஸ், மாமல்லபுரம்
    காலை 11 மணி    திருக்கழுக்குன்றம் பேரூர்    டிவிஎஸ் திருமண மண்டபம், திருக்கழுக்குன்றம்
    மதியம் 3 மணி    ஸ்ரீபெரும்புதூர் பேரூர்    ஒன்றிய திமுக அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர்

Tags : Urban Local Body Election DMK ,District Secretary ,Thamo Anparasan ,
× RELATED ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட...