தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.19: இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் பாரதியார், வேலுநாச்சியார், வஉசி படங்கள் அடங்கிய தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரில் மாவட்ட துணை செயலாளர் பழனிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்துக்குமார், சக்கணன் மற்றும் விசிக நிர்வாகி சக்திவேல், தமிழ்புலிகள் வீரப்பெருமாள், சமக மணிமாறன், ஏஐடியுசி பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். ராஜபாளையம் அருகே சேத்தூரில் மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, ஜெயராம், ராஜா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச் செயலாளர் மகாலிங்கம், நகர துணைச் செயலாளர் மாரிமுத்து, மகாராஜபுரம் ரங்ககுமார், புதுப்பட்டி செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் பாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, ராமச்சந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் கீழ ரதவீதி தெற்கு ரதவீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார் ஒன்றியச் செயலாளர் (பொ) பலவேசம் முன்னிலை வைத்தார். துணைச்செயலாளர் செல்வம், பேரூர் கழக செயலாளர் ராஜேந்திர சோழன், மாவட்ட குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி: சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா தலைமை வகிததார். சிவகாசி வட்டார துணைச் செயலாளர் கலைவாசகன், சிபிஐ சிவகாசி நகர செயலாளர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சமுத்திரம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருத்தங்கல் கிளைச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயராமன், லோடு சங்க செயலாளர் முனியசாமி, வட்டார குழு உறுப்பினர்கள் ஜவகர், காளியப்பன், ஜெயபால் சௌரிராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: