தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சாத்தூர், ஜன.19: சாத்தூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் அரு கே படந்தால் கிராமம் தென்றல்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன்(38). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் முனீஸ்வரி(32) என்பவருடன் திருமணம் நடந்து 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று சரவணன் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். வீட்டில் ஆளில்லாத நேரத்தில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சாத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தூக்கு மாட்டி இறப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: