திருமலை நாயக்கர் சிலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை

திண்டுக்கல், ஜன.19: மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ..பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாயுடு-நாயக்கர் உறவின்முறை(பாதுகாப்பு இயக்கம்) திண்டுக்கல் மாநில தலைமையகம் சார்பாக மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு நாயுடு மஹாலில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல் விடுதலை போராட்ட வீரர் விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு கோபால சமுத்திரகரை அல்லது திண்டுக்கல் மையத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாவீரர் விருப்பாட்சி கோபால் நாயக்கர் பெயர் சூட்ட வேண்டும். மதுரை தமுக்கம் மைதானத்தில் பேரரசி ராணி மங்கம்மாள் சிலை நிறுவ வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு மாமன்னர் திருமலை நாயக்கர் பெயர் சூட்ட வேண்டும். சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை நிறுவ வேண்டும் என விழாக்குழுவினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகரச் செயலாளர் ராஜப்பா, மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: