×

கிராப்ட் பேப்பர் விலை உயர்வால் அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை

திருப்பூர், ஜன.19:  கிராப்ட் பேப்பர் விலை உயர்ந்துள்ளதால் அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு பிறகு ஏற்றுமதி செய்ய  அட்டை பெட்டிகளில் வைத்து பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அட்டை பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான கிராப்ட் பேப்பரின் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கண்ணன் கூறியதாவது: கொரோனா பாதிப்பு மற்றும் ஆர்டர்கள் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து  கொண்டிருக்கின்றனர். கிடைக்கிற கணிசமான ஆர்டர்களின்படி அட்டை பெட்டிகள் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறோம். அட்டை பெட்டி உற்பத்திக்கு தேவையான கிராப்ட் பேப்பரின் விலையும் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மேலும் எங்களை சிரமத்தை சந்திக்க வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கணவரிடம் ஜீவநாம்சம் பெற்றுத்தரக்கோரி...