ஏர் ஹாரன் சத்தத்தால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், ஜன. 19: கனரக வாகனங்களில் 70 டெசிபல் என்ற அளவில் மட்டுமே ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்த வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால் திருப்பூர் மாநகரப்பகுதியில் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள், பார்சல் சர்வீஸ் லாரிகள், கார்கள் போன்றவைகளில் அதிக சத்தத்துடன் கூடிய ஏர்ஹாரனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிற வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் ஏர்ஹாரன் பயன்பாட்டை  கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: