கொரோனா பரவல் எதிரொலி நீலகிரியில் முருகன் கோயில்கள் மூடல்

ஊட்டி, ஜன. 19: கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டு தோறும் தைப்பூசத்தின் போது முருகன் கோயில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்படுவது வழக்கம். பலரும் மாலை அணிந்து காவடி எடுத்து வருவது வழக்கம். அதேேபால், பல்வேறு நேர்த்தி கடன்கள் செலுத்துவது வழக்கம். ஊட்டியில் உள்ள ஹெல்கிஹில் முருகன் கோயில், சுப்பிரமணியார் கோயில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

 இந்நிலையில் கொரோனா எதிரொலில் தமிழக அரசு வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்கள் வழிப்பாட்டு தலங்களை அடைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், நேற்று தைப்பூசம் என்பதால், அதிகளவு பக்தர்கள் வரக்கூடும் என்பதால், நேற்று கோயில்களை அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பெரும்பாலான முருகன் கோயில்கள் அடைக்கப்பட்டன. ஒரு சில கோயில்கள் பக்தர்கள் இன்றி முருக பெருமானுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. ஊட்டியில் உள்ள ஹெல்கில் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இதனால், பெரும்பாலன பக்தர்கள் நுழைவு வாயில் நின்று பூஜைகளை செய்தனர். ேமலும், பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டிருந்ததை தெரியாமல், தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: