கோவில்பட்டியில் 439வது பிறந்தநாள் திருமலை நாயக்கர் படத்திற்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மரியாதை

கோவில்பட்டி, ஜன. 19: கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி கோவில்பட்டி சீனிவாசநகரில் உள்ள திருமலை நாயக்கர் நினைவுத்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாமன்னர் திருமலை நாயக்கரின் படத்திற்கு   முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும்  மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை மாநில தலைவர் சிவன்ராஜ், மாநில துணைச்செயலாளர் ரூபன் நாயுடு, வடக்கு மாவட்ட பாசறை தலைவர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மதிமுக இளைஞர் அணி  தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் விநாயகா ரமேஷ், கம்மவார் சங்கத்தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், பொருளாளர் சிவக்குமார், தொழிலதிபர் ஹரிபாலன், திமுக வர்த்தக அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சூரியராஜ், வக்கீல் அழகர்சாமி, மதிமுக குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், அதிமுக நகரச்செயலாளர் விஜய பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜ்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வக்கீல் அணி மாவட்டச்செயலாளர் சிவபெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் ஜெமினி என்ற அருணாசலம்,  எம்ஜிஆர் அணி மாவட்ட இணைச் செயலாளர் போடுசாமி, பழனிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: