மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

மானூர், ஜன.19:  மானூர் அருகே உள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி (48). விவசாயி. பேட்டை காந்திநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வேல்சாமி தெற்குபட்டியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை தோட்டத்திற்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தின் அருகே ராமகிருஷ்ணன் என்பவரின் விவசாய வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வேல்சாமி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து மானூர் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: