காவல்கிணறு வணிக வளாகத்தில் தீவிபத்து

நெல்லை,ஜன.19: காவல் கிணற்றில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் ஏசியை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீ எரிவதைகண்டு சுதாரித்த ஊழியர் உடனடியாக மின்சார மெயின் சுவிட்சை அணைத்து விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீ கொளுந்துவிட்டு மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்து அருகிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் வேகமாக அணைத்தனர் இதனால் கீழ்தளத்தில் இயங்கிவரும் அரசுடைமை வங்கி மற்றும் ஏடிஎம் போன்றவைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Related Stories: