குமரி மாவட்டத்திற்கு 600 டன் பாக்டம்பாஸ் உரம்

நாகர்கோவில், ஜன. 19 : ஒன்றிய அரசு மாநில தேவைகளுக்கு ஏற்ப ரசாயன உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உர டீலர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.  ஒன்றிய அரசின் ஒதுக்கீடுபடி 630 டன் பாக்டம்பாஸ் உரம் கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.  பின்னர் லாரி மூலம் ஏற்றி ஒழுகினசேரியில் உள்ள மத்திய அரசு கிட்டங்கியில் கொண்டு வைக்கப்பட்டது.அவை விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்படவுள்ளது.

Related Stories: