குளித்தலை அருகே மது விற்ற இருவர் கைது

குளித்தலை ஜன.19:   குளித்தலை அருகே மேல குட்டப்பட்டி நடு தெருவைச் சேர்ந்தவர்  லோகநாதன் (36). இவர் மேல குட்டப்பட்டி வாய்க்கால் கரை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கோரை பட்டியில்  ஜீவா என்கிற ஜீவானந்தம் (52) என்பவர் தனது பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: