8 ஊர் சாமி சந்திப்பு தைப்பூச தீர்த்தவாரி கோயில்கள் உள்ளே பக்தர்கள் இன்றி நடைபெற்றது

குளித்தலை,ஜன.19:   குளித்தலை கடம்பவனேஸ்வரர்  கோயிலில் வருடந்தோறும் தைப்பூச தினத்தன்று அய்யர்மலை குளித்தலை கருப்பத்தூர் திருவேங்கிமலை ராஜேந்திரம் பெட்டவாய்த்தலை முசிறி வெள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமி அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்து குளித்தலை கடம்பர் துறையில் சந்திப்பு கொடுத்து பின்னர் சிவாச்சாரியார்கள் கொண்டுவந்த சூலாயுதம் வைத்து தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த தீர்த்த வரியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் வெளி மாவட்டத்தில் இருந்தும் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கலந்து கொள்வார்கள். அடுத்த நாள் சுவாமிவிடையாற்றி உற்சவம் நடைபெறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாவது அலை வீசி வருவதால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று நடைபெற இருந்த தைப்பூச திருவிழா மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி  கொரோனா நெறிமுறைகள் வழிகாட்டுதலின்படி 8 ஊர் சுவாமிகள் உள்ள இடத்திலேயே அருகில் உள்ள நீர் நிலைகளில் சிவாச்சாரியார்கள் நீர் எடுத்துவந்து பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே அஸ்திர தேவதைக்கு தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் தைப்பூச தினத்தன்று வேண்டுதல்களை நிறைவேற்ற குறைந்தளவு வந்திருந்தனர். அவர்கள் கடம்பன் துறையில் வேண்டுதலை நிறைவேற்ற  முடிகாணிக்கை செலுத்தி காவிரி நதியில் புனித நீராடி புத்தாடை உடுத்தி காது குத்து நிகழ்ச்சி நடத்தி கோயில் நுழைவு வாயில் முன்பு சூடம் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்து தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் பக்தர்கள் கோயில் உள்ளே செல்ல அனுமதி மறுத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Stories: