புளியந்துறை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் விஏஓ அலுவலக கட்டிடம் புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை

கொள்ளிடம், ஜன.19: கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் இந்த கட்டிடத்தின் மேற்கூரை பகுதியிலுள்ள காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மேலும் மேற்கூரை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்கின்றபோது மழைநீர் கசிந்து கட்டிடத்திற்குள் வருவதால் கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பதிவேடுகள் மழைநீரில் நனைந்து வீணாகிறது. எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் விஏஓ அலுவலகம் இயங்கி வருகிறது. தினந்தோரும் இக்கிராம மக்கள் பல சான்றுகள் பெறும் வகையில் இந்த கட்டிடத்திற்கு சென்று வருகின்றனர். எனவே கிராம மக்கள் பாதுகாப்புக் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள புளியந்துறை விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: