தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.19: டில்லியில் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர்களான வ.உ. சிதம்பரனார், பாரதியார் மற்றும் வீராங்கனை வேலு நாச்சியார் ஆகியோர் பெயரில் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்ட பட்டியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இதற்கு ஒன்றிய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசின் இந்த முடிவை கண்டித்தும் தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஷேக்அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.முத்துப்பேட்டை:முத்துப்பேட்டை பேரூராட்சி எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத் கலந்து கொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: