திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரோட்ட விழா பந்தக்கால் முகூர்த்தம்

திருவாரூர், ஜன.19: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி திருஞானசம்பந்தர் எழுந்தளும் நிகழ்ச்சியும், பந்தகால் முகூர்த்தமும் நடைபெற்றது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்டமானது வரும் மார்ச் மாதம் 15ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சியானது நேற்று தேரடி விநாயகர் கோயில் முன்பாக சிவாச்சாரியார்கள் மூலம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியையொட்டி திருஞானசம்மந்தர் பெருமான் தனது சன்னதியிலிருந்து எழுந்தளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா, மேலாளர் குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: